அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.., எந்தெந்த மாவட்டங்கள்?
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் 15-ம் திகதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், "லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, இலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், இன்று முதல் ஒக்டோபர் 15 -ம் திகதி வரை தமிழகத்தில் பெரும்பான்மை இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று, சேலம், கிருஷ்ணகிரி தருமபுரி, திருப்பத்தூர், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேநேரம் நாளை (11.10.24), மேற்சொன்ன பகுதிகளுடன் மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |