தொடங்கும் தென்மேற்கு பருவமழை.., தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
கேரளாவில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளதால் அதனை ஒட்டிய கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 5 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்காசி, நெல்லை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்கள் மற்றும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.
மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
|