நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை.., எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்?
தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தெற்கு குஜராத்தில் இருந்து கர்நாடகா வரை காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல், நாளை கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும்.

நாளை மறுநாள் கோவை, நீலகிரி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் வெயிலின் தாக்கம் 98°F கீழ் குறையக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |