பிரித்தானியாவில் கொட்டித்தீர்த்த மழை... பல மில்லியன் மக்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை
பிரித்தானியாவின் சில பகுதிகளில் ஒரு மாதத்துக்கு பெய்யவேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததால் பல இடங்கள் வெள்ளக்காடாகியுள்ளன.
இந்நிலையில், இன்றும், பல மில்லியன் மக்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் ஆம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒரே நாளில் கொட்டித் தீர்த்த மழை
நேற்று ஞாயிற்றுக்கிழமை, கனமழை காரணமாக லண்டன் முதலான பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன.
சில இடங்களில் சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், ரயில் சிக்னல் அமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதால், ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
🚨 We’re really sorry for the disruption to @Se_Railway passengers this morning after a night of heavy rainfall caused flooding on the #Hayes and #Hastings lines. At Wadhurst, the flooding has impacted signalling kit - the railway’s traffic lights - and we’ve got a flooded… pic.twitter.com/uuMzicoRL1
— Network Rail Kent & Sussex (@NetworkRailSE) September 23, 2024
ஆம்பர் எச்சரிக்கை
⚠️⚠️ Amber weather warning UPDATED ⚠️⚠️
— Met Office (@metoffice) September 23, 2024
Heavy rain across parts of central and southern England
Monday NOW – 2100
Latest info 👉 https://t.co/QwDLMfRBfs
Stay #WeatherAware ⚠️ pic.twitter.com/S3ARYSxnOy
மத்திய மற்றும் தெற்கு இங்கிலாந்துக்கு ஆம்பர் எச்சரிக்கையும், மீதமுள்ள பகுதிகளுக்கு மஞ்சள் மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை உள்ளூர் நேரப்படி இன்று இரவு 9.00 மணி வரைக்கும் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
We attended this vehicle stranded in floodwater overnight on Manor Road in #Wallington 🚙⚠️
— London Fire Brigade (@LondonFire) September 23, 2024
If you're out on the roads today, please do not drive through floodwater ⛔️
A foot of moving water at just 6mph is enough to float a car. Always try and find an alternative route. pic.twitter.com/gsEiHhsufg
மேலும், சுற்றுச்சூழல் ஏஜன்சி, லண்டனின் சில பகுதிகள் உடபட, இங்கிலாந்துக்கு 13 பெருவெள்ள எச்சரிக்கைகள் விடுத்துள்ளது.
பல இடங்களில், 60 முதல் 80 மில்லிமீற்றர் வரையும், சில இடங்களில் 120 மில்லிமீற்றர் வரையும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
சில இடங்களில் பெருவெள்ளம், போக்குவரத்தில் பாதிப்பு, மின்னல் தாக்குதல், மின்வெட்டு ஆகிய பிரச்சினைகள் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ள வானிலை ஆராய்ச்சிமையம், மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இடங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |