தமிழகத்தில் 12 மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழையும், 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 27ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும்.
இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நேற்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்தது.
12 மாவட்டங்களில் கனமழை
இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் மிக கனமழை பெய்யக்கூடும்.
இதேபோல், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |