தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை மையம்
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டியுள்ள கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து, குமரிக்கடல் பகுதி வரை கேரளம் மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் வழியாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
இதற்கிடையில், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் சில மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், வரும் மே 27ஆம் திகதி வரை மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |