தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்யும்.., எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று திருவண்ணாமலை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது.
அதேபோல் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை வாய்ப்புள்ளது.
நாளை கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மேலும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |