தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை மையம்
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு வாரத்திற்கு மழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது.

குறிப்பாக, தேனி, திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தமட்டில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மேலும், அதிகபட்ச வெப்பநிலை 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |