தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மழை பெய்யும்.., எங்கெல்லாம் தெரியுமா?
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தமிழக கடலோரப் பகுதிகளின் வழியாக காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் இன்றும் நாளையும் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அதேபோல் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் விருதுநகர், தென்காசி, நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வரும் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில், இன்று வெயிலின் தாக்கம் 102º F ஒட்டியே இருக்கும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |