தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.., எங்கெல்லாம் தெரியுமா?
தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
கிழக்கு விதர்பா முதல் தமிழ்நாடு பகுதிகள் வரை தெலங்கானா மற்றும் ஆந்திரா வழியாக ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, ஈரோடு, மதுரை, திண்டுக்கல், தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.

அதேபோல், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், சென்னையில் வெயிலின் தாக்கம் 100ºF ஒட்டியே இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |