இன்றும் நாளையும் தீவிரமடையும் கனமழை.., எச்சரிக்கை விடுத்த தமிழ்நாடு வெதர்மேன்

TN Weather Weather Cyclone Fengal
By Sathya Nov 29, 2024 04:24 AM GMT
Report

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதி தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தீவிரமடையும் கனமழை

வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

மேலும், இது மணிக்கு 9 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 7 கிமீ ஆக குறைந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மணிக்கு 280 கிமீ வேகத்தில் செல்லும் அதிவேக ரயிலை விரைவில் அறிமுகம் செய்யும் இந்தியா

மணிக்கு 280 கிமீ வேகத்தில் செல்லும் அதிவேக ரயிலை விரைவில் அறிமுகம் செய்யும் இந்தியா

இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள்,சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் தீவிரமடையும் கனமழை.., எச்சரிக்கை விடுத்த தமிழ்நாடு வெதர்மேன் | Heavy Rain To Intensify Today Tmrw Tn Weatherman

இந்நிலையில், மழை நிலவரம் குறித்து தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "சென்னையில் இன்றும் நாளையும் அதி தீவிர மழைக்கு வாய்ப்புள்ளது. தற்போது தொடங்கும் மழை, நண்பகல், மாலை மற்றும் இரவு நேரங்களில் படிபடியாக தீவிரமடையும்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் முதல் மரக்காணம் வரை கடற்கரைப் பகுதிகளில் 29 -ம் திகதி தொடங்கி 30 -ம் திகதி வரை மிக மிக கனமழை பெய்யும்" என்று கூறியுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US