தமிழகத்தில் இன்று கனமழை வெளுக்கும்.., எங்கெல்லாம் தெரியுமா?
தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று மிதமான மழை பெய்யும்.
மேலும், இன்றும் நாளையும், தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 25ஆம் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அதேபோல், ஜூன் 26ஆம் திகதி நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரியில் கனமழை வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
அதேநேரம் சென்னையில் இரண்டு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் 100ºF ஒட்டியே இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |