வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை: எந்ததெந்த பகுதிகளில் கனமழை?
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி
தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த 5 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பு நிலையை விட குறைவாக இருக்க கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
மேலும் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வருகிற மே 22ம் திகதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
எந்ததெந்த பகுதிகளில் கனமழை?
"நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேபோல் 18, 19, 20, 21 ஆகிய தேதிகளில் பரவலாக கனமழையும், அதிகனமழையும் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55km வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |