உருவாகும் இரண்டு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.., எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இந்நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் மழைக்கான அலர்ட் பதிவை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது..,
அதில், இன்று காலை முதல் சென்னை முதல் டெல்டா மாவட்டங்கள் வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமாரி கடற்கரை பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை முதல் மழை வரும் என கூறியுள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய சுழற்சியானது சென்னை, பாண்டி, கடலூர், ராமேஸ்வரம் ஆகிய கடலோர மாவட்டங்கள் அடுத்த இரண்டு நாட்கள் நீடிக்கும்.
தென் தமிழகத்தில் வெள்ளிக்கிழமை முதல் மழை பெய்யும், அடுத்த 2 நாள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், பாண்டி, கடலூர் பகுதிகளில் மழை பெய்யும்.
இதேபோல காரைக்கால், நாகை போன்ற இடங்களிலும் மழை பெய்யும்.
இந்த மழையானது வெள்ளிக்கிழமை முதல் ராமநாதபுரம் கடலோர பகுதிகளுக்கு மாறும் என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மழையானது சில இடங்களில் கனமாக இருக்கும் மற்ற இடங்களில் மிதமான மழையாக இருக்கும்.
இன்று சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் குடை மற்றும் மழைக்கோட்டை தவறாமல் எடுத்துச் செல்லுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |