நாளை வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி.., 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், வரும் 21ஆம் திகதி 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
மேற்கு வங்கக் கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.
இந்நிலையில், வரும் 18ஆம் திகதி வரை, தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே நிலவக் கூடும் என தெரிவித்துள்ளது.
மேலும், காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடையக் கூடும் என்பதால், 19ஆம் திகதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்.

20ஆம் திகதி தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
அதுபோல், வரும் 21ஆம் திகதி மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், 22ஆம் திகதி தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |