வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வடக்கு வங்கக்கடலில் நேற்று புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.
அடுத்த 36 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவை நோக்கி நகரக்கூடும்.
இதையடுத்து, தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் கனமழை
இதன் காரணமாக கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகள் நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி திருப்பத்தூர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மேலும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |