அடுத்த 3 நாட்கள் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை மையம்
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் வரும் புதன்கிழமை வரை பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
மத்திய கிழக்கு வங்கக்கடல் முதல் லட்சத்தீவு வரை மத்திய மேற்கு, தென்மேற்கு மற்றும் குமரிக் கடல் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழை தொடரும்.

குறிப்பாக, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் வரும் புதன்கிழமை வரை பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்.
இந்த மாவட்டங்களோடு ஞாயிறு அன்று விழுப்புரம் மாவட்டத்திலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தமட்டில் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஓரிரு பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |