தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும்.., எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
நிலவும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
சுமார் 0.9 கிமீ உயரத்தில், வட உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, தென் உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்.
மேலும், மே 1ஆம் திகதி திருப்பூர், திண்டுக்கல், மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
இதனைத்தொடர்ந்து மே 2ஆம் திககி திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |