தமிழகத்தில் இன்று கனமழை வெளுக்கும்.., எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
சராசரி கடல் மட்டத்தில், தெற்கு குஜராத்தில் இருந்து வடக்கு கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
குறிப்பாக, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் இன்று கனமழை பெய்யக்கூடும்.

அடுத்த 4 நாட்களுக்கு, இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும்.
சென்னையை பொறுத்தவரையில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று வீசக்கூடும் எனவும் மீனவர்களை எச்சரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |