வங்ககடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.., எப்போது கரையை கடக்கும்?
வங்ககடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
வங்கக்கடலில் நிலைகொண்ட ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது.
மேலும், காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே வடதமிழகம்- புதுச்சேரி-தெற்கு ஆந்திரா கடலோர பகுதியை நோக்கி நகரும் என்றும் கணித்துள்ளது.
இதன்படி, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அதேபோல் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது.
இதேபோன்று, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களுக்கும் இன்று கனமழை எச்சரிக்கை உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |