தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.., வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தெற்கு கேரளம் மற்றும் அதனை ஒட்டிய தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு வாரத்திற்கு மழை தொடரும்.
குறிப்பாக, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களிலும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும்.

அதேபோல் நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், தென்காசி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களிலும் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும்.
சென்னையில் இன்று மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்சமாக 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |