தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
வானிலை மையம் கூறியதாவது..,
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் நாளை கனமழை பெய்யக்கூடும்.
மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 100km வேகம் வரை சூறைக்காற்று வீசக்கூடும்.
தென்மேற்கு, தென்கிழக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 80km வேகம் வரை சூறைக்காற்று வீசக்கூடும் என்பதாலும் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |