தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்களுக்கு மழை பெய்யும்.., எந்தெந்த மாவட்டங்களில்?
வரும் 30ஆம் திகதி முதல் மே 2ஆம் திகதி வரை தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தமிழ்நாட்டின் மேல் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதால், ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளிலும் மிதமான மழைக்கும், வரும் 30ஆம் திகதி முதல் மே 2ஆம் திகதி வரை நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் மே 1 மற்றும் 2ஆம் திகதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மழையின்போது மணிக்கு 40 km வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |