அதிகாலை கரையை கடந்த மொந்தா புயல்.., தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்யும்
வங்கக்கடலில் உருவான மொந்தா புயல் ஆந்திரா அருகே கரையை கடந்த நிலையில், தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் கடந்த திங்கட்கிழமை உருவான புயல் மசூலிபட்டினம்- கலிங்கபட்டினம் இடையே அதிகாலை கரையை கடந்தது.
புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது.

மொந்த புயல் ஆந்திராவில் கரையை கடந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்களுக்கு மிதமான மழையே பெய்யும்.
சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மேலும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
அதேநேரம் தமிழ்நாடு, புதுச்சேரியின் கடலோர பகுதிகள் மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 45 முதல் 55km வரை வேகத்தில் காற்று வீசக்கூடும், இடையிடையே 65km வரை வேகத்தில் தரைக்காற்று வீசும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |