பிரான்சில் இருளில் மூழ்கிய 170,000 வீடுகள்: கடும் பனியால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பிரான்சில் கடும் பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இருளில் மூழ்கிய 170,000 வீடுகள்
பிரான்சில், Caetano புயல் என அழைக்கப்படும் புயல் கொண்டு வந்த கடும் பனிப்பொழிவால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 170,000 வீடுகள் இருளில் மூழ்கியுள்ளதாக பிரான்ஸ் ஆற்றல் துறை அமைச்சரான Agnes Pannier-Runacher தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய Agnes, மின் தடையை சரி செய்யும் பணியில் 1,400க்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
என்றாலும், புயல் தொடர்வதால் பாதிப்பு தொடரும் என்றே அஞ்சப்படுகிறது.
புயல் காரணமாக சில முக்கிய விமான நிலையங்களில் 10 சதவிகித விமானங்கள் ரத்து செய்யப்பட இருப்பதால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அதிவேக ரயில் சேவையும் பாதுகாப்பு கருதி சில இடங்களில் குறைக்கப்பட்டுள்ளதாகவும், சில இடங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கிடையில், பிரான்ஸ் வானிலை ஆராய்ச்சி மையம், மெட்ரோபோலிட்டன் பிரான்சின் 56 பகுதிகளில், பலத்த காற்று மற்றும் கடும் பனிப்பொழிவைக் காரணம் காட்டி, ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |