ஜேர்மனியை உலுக்கி எடுக்கும் பனிப்பொழிவு - நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை
ஜேர்மனியின் தெற்குப் பகுதியில் உள்ள பவேரியா மாநிலத்தில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டு ஒட்டு மொத்த நகரமே முடிங்கியுள்ளது.
ஜேர்மனியில் தொடரும் கடும் பனிப்கொழிவு
இதன் காரணமாக அனைத்து விமானங்கள், பேருந்து சேவைகள் மற்றும் ரயில் தண்டவாளத்தில் பனிகள் மூடப்பட்டுள்ளதால் அனைத்து சேவைகளும் முடங்கியுள்ளன. பல பகுதிகளில் விமானங்களின் புறப்பாடு மற்றும் தரையிறங்குதல் போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
முனிச் மற்றும் உல்மில் சில ரயில்களில் உள்ள பயணிகள் தங்கள் இரவை ரயிலிலேயே கழிக்க வேண்டியதாக இருந்துள்ளது.
போக்குவரத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதால் பல சாலை விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பில் அந்நாட்டு மீட்டு படையினர் தெரிவித்த அறிக்கையின் படி, இதுவரையில் சுமார் 350 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பலருக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளன.
தெற்கு, தென்கிழக்கு மற்றும் மாநிலத்தின் வடக்குப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு தொடரும் என்று ஜேர்மன் வானிலை சேவை தெரிவித்துள்ளது.
இதையடுத்து ஜேர்மனியில் மாத்திரமின்றி அதை சுற்றியுள்ள ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்திலும் பனிப்புயல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இயற்கை அனர்த்தம் காரணமாக சாலையில் மரம் முறிந்து விழுந்து பலர் மின்சார தடையினால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
மேலும் பனிபுயல் காரணமாக ஏற்பட்ட பனிமண்டலங்கள் பின் நிலச்சரிவாக மாறும் அபாயம் இருப்பதாகவும் தெரியப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |