உடல் பருமன் உள்ளவர்களுக்கு கொரோனா வந்தால்? எச்சரிக்கை! மருத்துவர்கள் விளக்கம்

Health CoronaVirus Weight
By Kaviarasan Jun 10, 2021 05:28 PM GMT
Report
Courtesy: MalaiMalar

 கொரோனா தொற்றுக்கு ஆளாகும் உடல் பருமன் நோயுள்ளவர்களுக்கு, உயிருக்கு அதிக ஆபத்து உள்ளதாக செரிமான நலத்துறை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.ஆர்.பழனிசாமி தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர் கூறினர்.

உடல் பருமன் நோய் தொடர்பாக ஆன்லைன் மூலம் நடந்த கருத்தரங்கத்தில், செரிமான நலத்துறை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.ஆர்.பழனிசாமியை ஒருங்கிணைப்பாளராக கொண்ட மருத்துவர்கள் குழுவினர் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் டாக்டர் கே.ஆர்.பழனிசாமி மற்றும் செரிமான நலத்துறை சிகிச்சை நிபுணரான டாக்டர்கள் பி.கே.ரெட்டி, கவுர்தாஸ் சவுத்திரி, வி.பாலசுப்பிரமணியன், பி.பிரமநாயகம் மற்றும் கல்லீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் முருகன், டாக்டர் கார்த்திக் ஆகியோர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:- ஒரு காலகட்டத்தில் உடல் பருமன் என்பது, செழிப்பான வாழ்க்கையை குறிக்கும் அறிகுறியாகக் காணப்பட்டது.

ஆனால் உடல் பருமன் பல்வேறு வகையான புற்றுநோய்கள் உருவாகும் அளவிற்கு கொண்டு சென்றுவிடுகிறது. ஈரலைச் சுற்றி கொழுப்பு சேர்வதன் மூலம் செரிமான பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்க்கு ஆளாக வேண்டியதாகிவிடுகிறது.

போர்கள், பஞ்சம் இருந்த காலகட்டத்தில் உடல் பருமன் நோயை காண்பது அரிதாக இருந்தது. ஆனால் இன்று 3 வேளை உணவு மற்றும் பீட்சா, பர்கர் என்ற கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுவதால் இந்த நோய்க்கு ஆளாக நேரிடுகிறது. ஏழைகள் அதிகம் வாழும் ஆப்ரிக்காவில் உடல் பருமன் நோயினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவு.

உடல் பருமன் நோயினால், 49 சதவீதம் இருதய நோய்கள், 38 சதவீதம் மூச்சு சம்பந்தப்பட்ட நோய்கள், 19 சதவீதம் புற்றுநோய் ஏற்படுகின்றன. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குத்தான் கொரோனா தொற்று, உயிருக்கு அதிக ஆபத்தை உருவாக்குவதாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள, உடல் பருமன் நோயுள்ளவர்களுக்கும் அதே அளவுக்கு ஆபத்து உள்ளது. இதற்கான தரவுகள் தற்போது கிடைத்து வருகின்றன. தீவிர சிகிச்சைப் பிரிவு, வெண்டிலேசன் ஆகிய சிகிச்சைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு இவர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

பரம்பரை பிறப்பு, உணவுப் பழக்கம், உடற்பயிற்சி ஆகியவை உடல் பருமனுக்கு மிகுந்த தொடர்புடையவையாக உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, அதிக கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடுவதோடு, சோம்பேறித்தனம் அதிகமுள்ள நாடாக விளங்குகிறது.

அதிக கொழுப்புள்ள உணவுதான் உடல் பருமனுக்கு காரணம் என்று நினைக்கிறோம். ஆனால் முதல் எதிரி சர்க்கரைதான். ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், கேக்குகள் உடல் பருமனுக்கு ஏதுவாக உள்ளன. உடல் பருமனில் இருந்து விடுபட விரதம் இருக்கலாம். சைக்கிளிங், நடைப்பயிற்சி போன்ற உடல் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். கலோரி குறைவாக உள்ள உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். இவ்வாறு அவர்கள் அறிவுரை வழங்கினர்.

மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US