டெஸ்லா கார்களை வாங்கவேண்டாம்... எலான் மஸ்குக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் அதிரடி
ஜேர்மனியிலுள்ள டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்தின் சுவரில், எலான் மஸ்குக்கு எதிரான கருத்துக்களைக் கூறும் வீடியோ ஒன்று திரையிடப்பட்டுள்ளது.
டெஸ்லா கார்களை வாங்கவேண்டாம்...
The world’s richest man @elonmusk is promoting the far right in Europe. Don’t buy a @Tesla.
— Led By Donkeys (@ByDonkeys) January 23, 2025
Location: Tesla Gigafactory, Berlin.
(In collaboration with @politicalbeauty) pic.twitter.com/xaacsX4Qw4
ஜேர்மன் தலைநகர் பெர்லினுக்கருகிலுள்ள Grunheide என்னுமிடத்தில், எலான் மஸ்குக்கு சொந்தமான டெஸ்லா நிறுவன கார்களை தயாரிக்கும் பிரம்மாண்ட தொழிற்சாலை ஒன்று அமைத்துள்ளது.
புதன்கிழமை இரவு அந்த தொழிற்சாலையின் சுவரில், எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன கார்களை வாங்கவேண்டாம் என்று கூறும் ஒரு வீடியோ ஒன்று திரையிடப்பட்டது.
Led By Donkeys மற்றும் Germany's Centre for Political Beauty என்னும் பிரச்சார அமைப்புகள் அந்த வீடியோவை திரையிட்டுள்ளன.
என்ன காரணம்?
இப்படி அந்த பிரச்சார அமைப்புகள் எலான் மஸ்குக்கு எதிராக கொடி பிடிக்கக் காரணம், எலான் மஸ்க் ஜேர்மனி, ஆஸ்திரியா, பிரித்தானியா, இத்தாலி, நெதர்காந்து முதலான பல நாடுகளில், புலம்பெயர்தலுக்கு எதிரான கருத்துக்கள் கொண்ட தீவிர வலதுசாரியினருக்கு ஆதரவு தெரிவித்துவருகிறார்.
அவர் எந்தெந்த நாடுகளில் எந்தெந்த வலதுசாரியினருக்கு ஆதரவளிக்கிறார் என்பதை விளக்கமாக காட்டுகிறது அவரது டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்தில் சுவர் மீது திரையிடப்பட்டுள்ள அந்த குறும்படம்.
ஆக, உலகின் பணக்கார மனிதரான எலான் மஸ்கால் ஐரோப்பிய ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
எலான் மஸ்கின் பணத்தில் பெரும் பகுதியும் அவரது அதிகாரமும் அவரது டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்தைத்தான் சார்ந்துள்ளது.
எலான் மஸ்கின் டெஸ்லா காரை நீங்கள் வாங்கினால், நீங்கள் வலதுசாரியினர் ஒருவருக்கு ஆதரவளிக்கிறீர்கள் என்று பொருளாகிவிடும்.
ஆகவே, டெஸ்லா கார்களை வாங்கவேண்டாம் என வலியுறுத்துகிறது அந்த வீடியோ!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |