மேக்ஸ்வெலைத் தொடர்ந்து திடீர் ஓய்வை அறிவித்த அதிரடி வீரர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் ஹென்றிச் கிளாஸன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஹென்ரிச் கிளாஸன்
நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக, விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாஸன் 13 இன்னிங்சில் 487 ஓட்டங்கள் குவித்தார்.
இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாஸன் (Heinrich Klaasen) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற கிளாஸன், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வந்தார்.
இதுவரை 60 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கிளாஸன், 4 சதம் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 2,141 ஓட்டங்கள் குவித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 174 ஆகும்.
சுழற்பந்துவீச்சை நொறுக்குவதில் வல்லவர்
அதேபோல், 33 வயதாகும் கிளாஸன் 58 டி20 போட்டிகளில் 5 அரைசதங்களுடன் 1000 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
அத்துடன் 141.84 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். சுழற்பந்துவீச்சை அடித்து நொறுக்குவதில் வல்லவரான கிளாஸனின் இந்த அறிவிப்பு தென் ஆப்பிரிக்க ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
அதேசமயம் அவுஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, அதே நாளில் கிளாஸனும் ஓய்வு தெரிவித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |