சிக்ஸர் மழை! 43 பந்துகளில் சதம் விளாசிய வீரர்..டி20யில் 254 ஓட்டங்கள் எடுத்த அணி
தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் ஹென்ரிச் கிளாசன் 43 பந்துகளில் சதம் விளாசி மிரட்டினார்.
கிளாசன் அதிரடி சதம்
செஞ்சுரியனில் நடந்த டி20 போட்டியில் டி காக்கின் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், ப்ருயனின் பிரிட்டோரியா கேபிட்டல்ஸ் அணியும் மோதின.
முதலில் ஆடிய டர்பன் அணி 4 விக்கெட்டுக்கு 254 ஓட்டங்கள் குவித்தது. ருத்ர தாண்டவம் ஆடிய விக்கெட் கீப்பர் கிளாசன், 43 பந்துகளில் சதம் அடித்தார். அவரது சதத்தில் 6 சிக்ஸர், 10 பவுண்டரிகள் அடங்கும்.
pic.twitter.com/FzzivtU4x4
— Durban's Super Giants (@DurbansSG) February 5, 2023
Playing it on ?
The Heinrich special! #PCvDSG | #SuperGiantsStandTall
டி காக் 20 பந்துகளில் 43 ஓட்டங்களும், பிரீட்ஸ்கே 21 பந்துகளில் 46 ஓட்டங்களும் விளாசினர். பின்னர் ஆடிய பிரிட்டோரியா அணியின் விக்கெட்டுகளை ஜூனியர் தால, டிவைன் பிரிட்டோரியஸ் மற்றும் முல்டர் ஆகியோர் காலி செய்தனர்.
@DurbansSG(Twitter)
டர்பன் அணி வெற்றி
இதனால் அந்த அணி 13.5 ஓவரில் 103 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக போஸ்ச் 13 பந்துகளில் 23 ஓட்டங்கள் எடுத்தார். சதம் அடித்த கிளாசன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Our bowlers were breathing fire! ?#PCvDSG | #SuperGiantsStandTall | #DurbansSuperGiants | #DSG pic.twitter.com/jlWXfNhmAT
— Durban's Super Giants (@DurbansSG) February 5, 2023
நாளை நடக்கும் போட்டியில் ஜோபர்க் சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை கேப்டவுன் அணிகள் மோதுகின்றன.
Quinny-Ben mayhem, Klaasie special & Breetzke blitz helps us to put a mammoth score on the board ?✨
— Durban's Super Giants (@DurbansSG) February 5, 2023
Onto our bowlers now! ?#PCvDSG | #SuperGiantsStandTall | #DurbansSuperGiants | #DSG pic.twitter.com/OUvZxgnHNV