ரூ 112,000 கோடி வணிக சாம்ராஜ்யத்தின் வாரிசு... இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி மகனுடன் விவாகரத்து: யாரிந்த லக்ஷ்மி
வணிக உலகில் பெண்கள் பலர் தங்கள் குடும்ப நிறுவனங்களை மிகச் சிறப்பாக முன்னெடுத்துச் செல்கின்றனர். அப்படியான பிரபலங்களில் ஒருவர் லக்ஷ்மி வேணு.
ஐந்தாம் தலைமுறை தொழிலதிபர்
TVS குழுமத்தில் SCL என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வந்துள்ளார். ஜூன் 28ம் திகதி வெளியான தரவுகளின் அடிப்படையில், SCL நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 27888 கோடி என்றே தெரிய வந்துள்ளது.
லக்ஷ்மி ஐந்தாம் தலைமுறை தொழிலதிபர் மட்டுமின்றி, கடந்த இரண்டு ஆண்டுகளாக TVS குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வருகிறார். இதற்கு முன்னர் கடந்த 2010ல் இருந்து SCL நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக மட்டுமே செயல்பட்டு வந்துள்ளார்.
TVS குழுமத்தில் வேணு சீனிவாசன் என்பவரின் மகள் தான் இந்த லக்ஷ்மி வேணு. சீனிவாசனின் தற்போதைய சொத்து மதிப்பு என்பது ரூ 34,190 கோடி என்றே கூறப்படுகிறது.
டிவிஎஸ் குழுமமானது லக்ஷ்மியின் கொள்ளு தாத்தா டிவி சுந்தரம் ஐயங்காரால் நிறுவப்பட்டதாகும். சென்னையில் உள்ள சிஷ்யா பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்த லக்ஷ்மி அதன் பின்னர் அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.
ரோஹன் மூர்த்தியுடன் விவாகரத்து
இங்கிலாந்தின் Warwick பல்கலைக்கழகத்தில் பொறியியல் மேலாண்மையில் முனைவர் பட்டம் பெற்றார். மேலும், தமது தாயார் மல்லிகா சீனிவாசன் நிர்வாக இயக்குனராக செயல்படும் TAFE நிறுவனத்தில் துணை நிர்வாக இயக்குனராக உள்ளார்.
கடந்த 2011ல் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்ஆர் நாராயண மூர்த்தியின் மகனான ரோஹன் மூர்த்தியுடன் திருமணம் முடிந்த நிலையில், 2015ல் இந்த தம்பதி விவாகரத்துப் பெற்றுக்கொண்டது.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் பெங்களூருவை சேர்ந்த இளம் தொழிலதிபரான மகேஷ் கோகினேனி என்பவரை தனிப்பட்ட குடும்ப விழா ஒன்றில் லட்சுமி மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |