ரூ 7000 கோடி நிறுவனத்திற்கு வாரிசு... புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்: யாரிந்த நவ்யா
திரைப்படத் துறையில் கோலோச்சும் குடும்பத்தை சேர்ந்தவர், 21 வயதில் தொழில்துறையில் களமிறங்கி, இன்று தமது தந்தையின் பாதையை பின்பற்றி சொந்தமாக நிறுவனம் ஒன்றை முன்னெடுத்து நடத்துகிறார்.
தனக்கான பாதையை
பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப் மற்றும் ஜெயா பச்சனின் பேத்தியான நவ்யா நவேலி நந்தா என்பவரே தொழில் துறை மற்றும் நன்கொடை அளிப்பதிலும் முத்திரை பதித்து வருகிறார்.
திரைப்பட துறையில் இருந்து விலகி, தொழில் துறையில் தனக்கான பாதையை தமது தந்தை நிகில் நந்தாவுடன் உருவாக்கியுள்ளார். ரூ 7014 கோடி மதிப்பிலான Escorts Kubota நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார் நிகில் நந்தா.
அந்த நிறுவனத்தில் அவருக்கு 36.59 சதவிகித பங்குள்ளது. 21 வயதில் குடும்ப தொழிலில் களமிறங்கியவர் நவ்யா. அவருக்கு Escorts Kubota நிறுவனத்தில் 0.02 சதவிகித பங்குகள் உள்ளது.
அமிதாப் பச்சன் குடும்பம்
மட்டுமின்றி, மகளிர் தொடர்பான சுகாதாரத்தை முன்னெடுக்கும் Aara Health என்ற நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் நவ்யா உள்ளார். அத்துடன் Project Naveli என்ற அறக்கட்டளையை துவங்கி குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக உள்ளார்.
2023 நவம்பர் மாதம் அமிதாப் பச்சன் குடும்பம் தங்களின் ரூ 50 கோடி மதிப்பிலான Pratiksha என்ற குடியிருப்பை நவ்யாவின் தாயார் ஸ்வேதா பச்சனுக்கு கைமாறியுள்ளது.
தற்போது அந்த குடியிருப்பும் இந்தியாவின் பல பகுதிகளில் காணப்படும் சொத்துக்களும் நவ்யா பெயரில் மாற்றப்படும் வாய்ப்பும் உள்ளது. வெளியான தரவுகளின் அடிப்படையில் 26 வயதான நவ்யாவின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ 16.58 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |