முகேஷ் அம்பானியை விடவும் கோடீஸ்வரர்... 8 மாதங்களில் 24 பில்லியன் டொலர் சம்பாதித்த பெண்
ஆசியாவின் பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பை, வெறும் 8 மாதங்களில் 24 பில்லியன் டொலர் சம்பாதித்து முறியடித்துள்ளார் பெண்மணி ஒருவர்.
அவரது சொத்து மதிப்பு
ஆண்டு பிறந்து 8 மாதங்களில் 24 பில்லியன் டொலர் தொகையை சம்பாதித்து, மொத்த சொத்து மதிப்பாக 98 பில்லியன் டொலர் என பதிவு செய்துள்ளார். பிரெஞ்சு நிறுவனமான L'Oreal-ன் வாரிசு 72 வயதான Francoise Bettencourt Meyers என்பவரே முகேஷ் அம்பானியை முந்தியவர்.
இந்த ஆண்டில் மட்டும் அவரது சொத்து மதிப்பு 32 சதவீதம் உயர்ந்துள்ளது. மட்டுமின்றி, இந்த ஆண்டில் L'Oreal நிறுவனத்தின் பங்குகளும் 17 சதவீதம் வரையில் உயர்ந்து 400 டொலர் வரை எட்டியது.
L'Oreal நிறுவனர் Eugene Schueller என்பவரின் பேத்தியான Meyers, தங்களின் குடும்ப நிறுவனத்தில் 35 சதவீத பங்குகளை கைவசம் வைத்துள்ளார். Bloomberg செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டில் அதிக வருவாய் ஈட்டியவர்களில் 6வது இடத்தில் Meyers உள்ளார்.
அதிக வருவாய்
ஆல்பாபெட் இணை நிறுவனர்களான Larry Page மற்றும் Sergey Brin ஆகியோரை விடவும் Meyers இந்த ஆண்டு அதிக வருவாய் ஈட்டியுள்ளார்.
Bloomberg வெளியிட்டுள்ள கோடீஸ்வரர்கள் தர வரிசையில், 97.7 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி 19வது இடத்தில் உள்ளார். இந்த ஆண்டு மார் மாதம் வரையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருவாய் என்பது 114 பில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |