50 மில்லியன் கேட்ட தாலிபான்கள்! 8 மாதங்களுக்கு பின்னர் தப்பி ஓடி வந்த சுவிஸ் தம்பதியின் நெஞ்சை உலுக்கும் நினைவுகள்
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் பிடியில் சிக்கி சிறைபட்ட சுவிஸ் தம்பதிகள் தொடர்பில் உருவாக்கப்பட்ட திரைப்படம் சூரிச் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
கடந்த 2011ல் Daniela Widmer மற்றும் David Och தம்பதி ஆப்கானிஸ்தானில் வைத்து தாலிபான்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இருவரையும் மலைப்பகுதிக்கு இழுத்துச் சென்ற தாலிபான்கள், இரண்டு வார கலம் அவர்களை ஒருபகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு என அலைய வைத்துள்ளனர்.
மட்டுமின்றி, அவர்கள் பகலில் ஆட்டுக்கடைகளில் தூங்கியதுடன் இரவில் சதுப்பு நிலங்களில் அலைய வேண்டியிருந்தது. இதனால் பாதிப்புக்குள்ளான Widmer சுமார் 6 மாத காலம் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டுள்ளார்.
மலேரியாவில் பாதிப்புக்குள்ளான Och தனது உடல் எடையில் 22 கிலோ அளவுக்கு இழக்க நேர்ந்தது. ஒருகட்டத்தில் குடியிருப்பு ஒன்றின் முற்றத்தில் இவர்களை இருவரையும் தங்க வைத்துள்ளனர் தாலிபான்கள். இதன் பிறகே, நிலைமை சீரானது எனவும், குறைந்தபட்சம் உணவேனும் நல்லமுறையில் கிடைத்தது என்கிறார் Widmer.
மட்டுமின்றி, உடை கட்டுப்பாடு இருந்தது எனவும் தாலிபான்கள் அதில் கவனமாக இருந்ததாகவும் Widmer குறிப்பிட்டுள்ளார். மேலும், தமது நிலை குறித்து தொடர்ந்து அழுது புலம்பிக் கொண்டிருந்ததாகவும், ஆனால் தாலிபான்கள் அழக்கூடாது என பெண்கள் அழுவது பாவம் கூறியதாகவும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
தாலிபான்கள் நினைத்திருந்தால், தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருக்கலாம், அல்லது சித்திரவதைக்கு உட்படுத்தியிருக்கலாம் எனவும், ஆனால் அவர்கள் தம்மை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கவோ, நெருங்கக்கூடவில்லை என Widmer சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, தாலிபான்களிடம் சிக்கிய தம்பதிகளை மீட்க சுவிஸ் நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும், பிணைத்தொகையாக தாலிபான்கள் 50 மில்லியன் கேட்டதாகவும் ஆனால் 1.2 மில்லியன் மட்டுமே தர முடியும் என சுவிஸ் நிர்வாகம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது.
தாலிபான்களுக்கும் சுவிஸ் நிர்வாகத்திற்குமான பேச்சுவார்த்தை எந்த காலத்திலும் முடிவுக்கு வராது என தங்களுக்கு தெரியும் எனவும், அதனால் இருவரும் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்ததாகவும் கூறியுள்ள Widmer, தங்களை சிறை வைத்திருந்த பகுதியில் இருந்து தப்பியதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து சுமார் 259 நாட்களுக்கு பிறகு 2012 மார்ச் மாதம் 17ம் திகதி சூரிச் விமான நிலையத்தில் வந்து சேர்ந்ததாக Widmer தெரிவித்துள்ளார்.