வீரமுடன் இறுதிவரை போராடினார்! லண்டனில் உயிரிழந்த கோடீஸ்வர பெண்... யார் அவர்?
லண்டனை சேர்ந்த கோடீஸ்வர பெண்ணும், நடிகையுமான ஹெலன் மெக்ரோரி புற்றுநோயால் மரணமடைந்துள்ளார்.
52 வயதான ஹெலன் மரணம் அடைந்த தகவலை அவர் கணவர் டேமியன் லீவிஸ் உறுதி செய்துள்ளார்.
இது குறித்து அவரின் சமூகவலைதள பதிவில், புற்றுநோயுடன் இறுதிவரை வீரமுடன் போராடிய ஹெலன் வீட்டில் அமைதியான முறையில் மரணித்துவிட்டார் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
அவளை எங்கள் வாழ்க்கையில் பெற்றது நாங்கள் செய்த அதிர்ஷ்டம். எப்படி அச்சமின்றி வாழ்ந்தாளோ அதே போலவே இறந்திருக்கிறார் என பதிவிட்டுள்ளார்.
ஹெலனின் நிகர சொத்து மதிப்பு $25 மில்லியன் என தெரியவந்துள்ளது. அவரின் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.