காவல்துறை ஹெலிகொப்டருடன் நடுவானில் மோதிய சிறிய விமானம்
Helicopter and plane collided in pennsylvania: அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று, காவல்துறை ஹெலிகொப்டருடன் நடுவானில் மோதியது.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் மாநில காவல்துறை ஹெலிகொப்டருடன் சிறிய ரக விமானம் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது.
ஹெலிகொப்டர், சிறிய ரக விமானம் மோதல்
அமெரிக்காவில் கார்லைல் விமான நிலையம் அருகே, செஸ்னா 150 ரக விமானமும், பெல் 407 ஹெலிகொப்டரும் நடுவானில் மோதி விபத்திற்குள்ளாகின.
இதில் ஹெலிகொப்டர் மாநில காவல்துறையுடையது என்றும், அதில் இருவர் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. அதே சமயம் விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
என்றாலும், இதுவரை யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை; விபத்திற்கான காரணமும் இன்னும் தெரிய வரவில்லை.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். மேலும், தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) மற்றும் FAA ஆகியவை சம்பவம் குறித்து விசாரணை நடத்த உள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |