சத்தீஸ்கர் விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் விபத்து: 2 விமானிகள் மரணம்
இந்திய மாநிலம் சத்தீஸ்கரில் விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள விமான நிலையத்தில் வியாழக்கிழமை மாலை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் கேப்டன் கோபால் கிருஷ்ண பாண்டா மற்றும் கேப்டன் ஏபி ஸ்ரீவஸ்தவா ஆகியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விமானிகள் ஹெலிகாப்டரை தரையிறக்க முயன்றபோது ஹெலிகாப்டரில் தீப்பிடித்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த விமானிகள் இருவரும் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் பயணிகள் யாரும் இல்லை.
மானா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராய்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தா விமான நிலையத்தில் இரவு 9:10 மணியளவில் விமானப் பயிற்சியின் போது இந்த சம்பவம் நடந்ததாக மூத்த காவல் கண்காணிப்பாளர் (SSP) பிரசாந்த் அகர்வால் தெரிவித்தார்.
#Raipur #Helicopter #Crash: #CM #Baghel expressed grief by tweeting on the demise of #Captain Panda and #Srivastava pic.twitter.com/WnPtxTmXVL
— Shiv Kumar Maurya (@ShivKum60592848) May 12, 2022
விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. விபத்துக்கனா சரியான காரணத்தைக் கண்டறிய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) மற்றும் சத்தீஸ்கர் அரசு சார்பில் விரிவான தொழில்நுட்ப விசாரணை மேற்கொள்ளப்படும்.
இந்த விபத்து குறித்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் வருத்தம் தெரிவித்துள்ளதோடு, விமானிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
"ராய்ப்பூரில் உள்ள விமான நிலையத்தில் அரசு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் வருத்தமான செய்தி கிடைத்தது. இந்த சோகமான விபத்தில், எங்கள் விமானிகள் கேப்டன் பாண்டா மற்றும் கேப்டன் ஸ்ரீவஸ்தவா இருவரும் இறந்தனர். இந்த துக்க நேரத்தில் கடவுள் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு வலிமையையும், இறந்த ஆன்மாவிற்கு சாந்தியையும் தரட்டும்." என்று பூபேஷ் பாகேல் ஒரு ட்வீட்டில் கூறினார்.