13 பேரின் உயிரை பறித்த ஹெலிகாப்டர் விபத்து: கடைசி நிமிட வீடியோ காட்சிகள்
தமிழகத்தின் குன்னூரில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கடைசி நிமிட வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகியுள்ளது.
கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு 14 பேரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து ஒட்டுமொத்த இந்தியாவை உலுக்கிய நிலையில், குன்னூர் காட்டேரி பூங்கா அருகே ரயில் தண்டாவாளத்தில் நின்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் ஹெலிகாப்டரை வீடியோவாக எடுத்த காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.
இந்த காணொலியில், தாழ்வாக பறந்து செல்லும் ஹெலிகாப்டர் பனிமூட்டத்திற்குள் மறைந்த அடுத்த சில விநாடிகளில் பயங்கர சத்தம் கேட்கிறது.
எனினும், காணொலியில் காணப்படும் ஹெலிகாப்டர் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதுமி்ல்லை.