ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த உதவியாளர்! மோசமாக வசைபாடப்பட்ட அவரின் மகள்... எடுத்த முடிவு
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டர் உயிரிழந்த நிலையில் அவரின் மகள் டுவிட்டரில் மோசமாக ட்ரோல் செய்யப்பட்டு இணையவாசிகளால் வசைபாடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா உள்ளிட்ட 13 பேருடன் சேர்ந்து உயிரிழந்தார் பாதுகாப்பு உதவியாளராக இருந்த பிரிகேடியர் லக்விந்தர் சிங் லிட்டர்.
இவரின் மகள் ஆஸ்னா லிடர். தந்தையின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்து சிதைக்கு தீ வைப்பதற்கு முன்னரே இவர் இணையவாசிகளால் மோசமான வசைப்பாடப்பட்டது தான் பெரும் சோகம்.
ஏனெனில், ஆஸ்னா முன்னர் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்து டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அந்த பதிவை தற்போது எடுத்த வலதுசாரி ஆதரவாளர்கள் ஆஸ்னாவை மோசமாக ட்ரோல் செய்து விமர்சித்தனர்.
இந்த ட்ரோல்கள் தொடர்ந்ததால் வேதனையடைந்த அவர் தனது டுவிட்டர் கணக்கையே டி ஆக்டிவேட் செய்யும் முடிவுக்கு வந்தார், இதையடுத்து உடனடியாக கணக்கை மூடியுள்ளார்.
ஆஸ்னா தனது தந்தையை இழந்து தவிக்கும் இது போன்ற சமயத்தில் இப்படி ட்ரோல் செய்து வசைபாடியவர்களுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.