பிரித்தானியாவில் ஹெலிகாப்டர் விபத்து: விமான பயிற்சியில் ஈடுபட்ட நால்வர் நிலை கேள்விக்குறி!
பிரித்தானியாவில் விமான பயிற்சியின் போது 4 பேர் வரை பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்து
பிரித்தானியாவின் ஐல் ஆஃப் வைட் தீவில் நடந்த விமான பயிற்சியின் போது ஷாங்க்ளின் அருகே காலை 9.20 மணியளவில் ஹெலிகாப்டர் ஒன்று வயல் பரப்பில் விழுந்து விபத்துக்குள்ளானது.
பயிற்றுவிப்பாளர் உட்பட 4 பேர் விமானத்தில் பயணித்த நிலையில், ஒருவர் சிகிச்சைக்காக சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார். மற்ற மூவரின் நிலை குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
ஹாம்ப்ஷயர் மற்றும் ஐல் ஆஃப் வைட் பகுதியை சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் விபத்தின் காரணமாக A3020 ஷாங்க்ளின் சாலையை மூடியுள்ளனர்.
🏴 Helicopter Crash on Isle of Wight Kills 3
— SVS NEWS AGENCY (@svsnewsagency) August 25, 2025
A helicopter crash in a field near Shanklin Road, Ventnor, at around 9:24 AM has left 3 people dead.
The helicopter was being used for a flying lesson at the time of the incident.
Authorities have not confirmed the total number of… pic.twitter.com/jPSFqvwq7N
விபத்தில் சிக்கிய 4 பேர் சாண்டவுன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதை ஹெலிகாப்டரை இயக்கிய நார்தும்பிரியா ஹெலிகாப்டர்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போதைய் சமீபத்திய தகவலின் படி, ஹெலிகாப்டர் விபத்தில் 3 பேர் உயிரிழந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |