ஹோட்டல் மேற்கூரையில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்: அவுஸ்திரேலியாவில் பரபரப்பு
அவுஸ்திரேலியாவில் ஹெலிகாப்டர் ஒன்று ஹோட்டல் மேல் தளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்து
வடக்கு அவுஸ்திரேலியாவின் சுற்றுலா நகரமான கெய்ர்ன்ஸில்(Cairns) உள்ள ஹோட்டல் ஒன்றின் மேற்கூரை தளத்தின் மீது ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டர் விமானி உயிரிழந்த நிலையில், ஹோட்டலில் இருந்த 100க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் திங்கட்கிழமை தெரிவித்துள்ளனர்.
The fire after the helicopter crashed on the roof of Double Tree Hotel in Cairns. A friend was staying there. pic.twitter.com/Q5mkJ0BYHc
— Ben Pennings (@BenPennings) August 11, 2024
இரட்டை எஞ்சின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து திங்கட்கிழமை காலை 2 மணிக்கு அவசர கால குழுவினர் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டனர்.
விமானி உயிரிழப்பு
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், விமானியை முறைப்படி அடையாளப்படுத்துவதற்கான தடயவியல் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விமான சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் இந்த விபத்தின் போது தரையில் இருந்த எந்த மக்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் பொலிஸார் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
Chopper wreckage being loaded into the skip on the roof of #cairns hotel #helicoptercrash pic.twitter.com/kDa9e51bwb
— 🐝 David Peters 🐝 (@David_Peters_) August 12, 2024
இந்த விமான விபத்தானது Cairns நகரில் உள்ள Hilton's Double Tree Hotel-லில் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |