பக்தர்களுடன் பத்ரிநாத்திலிருந்து திரும்பிய ஹெலிகொப்டர் விபத்து
helicopter with 6 people on board missing at uttarakhand: பக்தர்களுடன் பத்ரிநாத்திலிருந்து திரும்பிய ஹெலிகொப்டர் விபத்துகுள்ளாகியுள்ளது.
பத்ரிநாத்திலிருந்து திரும்பிய ஹெலிகொப்டர் விபத்து
உத்தரகாண்ட் மாநிலத்தின் பத்ரிநாத்திலிருந்து, 5 ஆண் பக்தர்கள் மற்றும் விமானியுடன் டிரான்ஸ் பாரத் ஏவியேஷன் நிறுவனத்தால் இயக்கப்படும் மற்றும் VT-HCX என்ற பதிவு எண் கொண்ட ஹெலிகொப்டர் டேராடூனை நோக்கி இன்று மதியம் 1:14 மணிக்கு புறப்பட்டது.

அந்த ஹெலிகொப்டரானது, ஜோஷிமத்திற்கு எதிரே உள்ள ஹாத்தி பஹாடில் உள்ள ராணுவ முகாம் அருகே அந்த விமானம் கடைசியாகத் தொடர்பில் இருந்தது.
காணாமல் போன விமானத்தைக் கண்டுபிடிப்பதற்காக, மாவட்ட நிர்வாகம் 2 கூடுதல் ஹெலிகொப்டர் மூலம் வான்வழித் தேடுதல் குழுவை அனுப்பியுள்ளது.

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில், இந்திய ராணுவம், சமோலி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) ஆகியவை இனைந்து செயல்பட்டு வருகிறது.
ஹெலிகொப்டர் காணாமல் போனதையடுத்து, ஜோஷிமத்தில் உள்ள சையன் கிராமம் அருகே புகை சூழ்ந்தது காணப்பட்டது.
ஹெலிகொப்டரின் தற்போதைய இருப்பிடம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.