மதுபோதையில் கூகுள் மேப் உதவியுடன் சென்ற நபர்கள்.., கடலுக்குள் காரை ஒட்டியதால் அதிர்ச்சி
ஓட்டுநர் ஒருவர் மதுபோதையில் கூகுள் மேப் உதவியை பின்பற்றி கடலுக்குள் காரை தவறுதலாக ஒட்டியுள்ளார்.
கடலுக்குள் காரை இறக்கிய ஓட்டுநர்
தமிழக மாவட்டமான சென்னையை சேர்ந்த 5 நபர்கள் கடலூர் துறைமுகத்தில் இருந்து பரங்கிப்பேட்டை வழியாக காரில் சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் கூகுள் மேப் உதவியை பின்பற்றி கடற்கரை சாலையில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
மதுபோதையில் சென்ற அவர்கள் கடலூர் சொத்திக்குப்பம் அருகே சென்றபோது திடீரென கடற்கரை மணலில் காரை இறங்கியுள்ளனர்.
காரை வேகமாக இயக்கிய அவர்கள் கடலுக்குள்ளும் கார் செல்லும் என நினைத்து காரை கடலுக்குள் இறக்கியுள்ளனர். சிறிது நேரம் கடலில் சென்ற காரானது நின்றுவிட்ட நிலையில் அப்பகுதியில் இருந்த மீனவர்கள் மதுபோதையில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்டனர்.
பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு டிராக்டர் மூலம் காரை இழுத்து கரைக்கு கொண்டு வரப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |