தலைவலியால் பெரும் அவதியா? உடனடியாக குணமாக இதோ சூப்பரான வைத்தியம்!
இன்றைய காலத்தில் அடிக்கடி பலரும் சந்திக்கும் பிரச்சினைகளுள் தலைவலியும் ஒன்றாக இருக்கின்றது.
இது உடலில் நோய் எதிர்ப்பு குறைதல், புகை மற்றும் காற்று மாசடைந்த இடங்களில் நீண்ட நேரம் இருத்தல், அல்லது வேலை செய்தல், மழை மற்றும் பனிக்காலங்களில், இரு சக்கர வாகனங்களில் அதிக நேரம் பயணம் செய்தல், தலைக்கு குளித்துவிட்டு சரியாக துவட்டாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் நம் தலையில் நீர்கோர்த்து கொண்டு தலைவலி ஏற்படுகின்றது.
தலையில் நீர் கோர்த்துக் கொள்ளும்போது மூக்கடைப்பு, தலைபாரம், இருமல், சளித்தொல்லை போன்றவற்றோடு தொடர் தும்மலும் வரக்கூடும். ஆண்களைவிட பெண்களுக்கே இந்தப் பிரச்னை அதிகம் வருகிறது.
இதை வரும்முன் தடுப்பதுதான் சிறந்த வழி. எனவே தலைவலியை விரட்டும் சூப்பரான கஷாயம் ஒன்றை எப்படி செய்வது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
தேவையானவை
- துளசி இலை -ஒரு கைப்புடி அளவு
- இலவங்கபட்டை - பொடி சிறிதளவு
- சுக்கு பொடி - சிறிதளவு
செய்முறை
முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு துளசி இலையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
மேலும் இதனுடன் இலவங்கபட்டை பொடி மற்றும் சுக்கு பொடி சேர்த்து நன்கு அரைக்கவும். இப்போது அரைத்த பொருட்களை நெற்றி முழுவதும் தடவி விடவும்.
இப்படி செய்வதால் தலைநீர் மற்றும் தலைவலி உடலில் இருந்து முற்றிலும் நீங்கும்.