சர்க்கரை நோயாளிகளே! கால் புண்ணை விரைவில் குணப்படுத்த வேண்டுமா? இந்த வழிமுறையை பின்பற்றலாம்
பொதுவாக சர்க்கரை நோய் புண்கள் எங்கு வேண்டுமானாலும் வரலாம். அது பெரும்பாலோனோருக்கு கால்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சில நேரங்களில் கால்விரல்கள் அல்லது கால்களையே எடுக்கக்கூடிய கட்டாயத்திற்கு இந்த காயங்கள் கொண்டுபோய்விடும்.
எனவே முடிந்தவரை இதனை ஆரம்பத்திலே போக்குவது நல்லது.
அந்தவகையில் கால் புண் விரைவில் குணப்படுத்தக்கூடிய சூப்பரான இயற்கை முறை ஒன்றை இங்கே பார்ப்போம்.
தேவையானவை
- மா இலை
- அத்தி இலை
செய்முறை
மா இலை மற்றும் அத்தி இலை ஆகிய இரண்டையும் எடுத்து அரைத்து கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு மண் பாத்திரம் வைத்து அதில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் இந்த அரைத்த இலைகளை போட்டு அது பாதியாக வரும் வரை காய்ச்ச வேண்டும்.
பின்பு இதை ஒரு வெள்ளை துணியில் ஊற்றி வடிகட்டி அந்த சாறை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும்.
இந்த சாற்றை தினமும் காலை உணவுக்கு முன்பு 50 மில்லி குடிக்க வேண்டும். அதேப்போல் இரவு உணவுக்கு பிறகு 50 மில்லி குடிக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து குடித்து வர உடலில் ஏற்பட்ட புண் விரைவில் சரியாகும்.