முகத்தில் அசிங்கமாக தெரியும் கரும்புள்ளியை மறைக்கனுமா? இதோ சில டிப்ஸ்
Beauty Tips
Skin Problem
By Kishanthini
பொதுவாக முகப்பருக்களை தற்காலிகமாக சரி செய்தாலும் கூட, அதனால் உருவாகும் கரும்புள்ளிகள் நமது சருமத்தில் நிரந்தரமாக இருந்து விடுகிறது.
இந்த கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருவை எதிர்த்துப் போராட நாம் பல்வேறு வழிகளை முயற்சி செய்தாலும் சில சமயங்களில் நிரந்தர தீர்வினை தராது.
கரும்புள்ளிகளை எளியமுறையில் மறைய வைக்க ஒரு சில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- உப்பினை நீரில் கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து சுத்தமான நீரினால் கழுவ வேண்டும்.
பருக்களால் வந்த கரும்புள்ளிகள் தழும்புகளை மறைக்க உப்பு சிறந்த பொருள். பருக்கள் உடைந்து மற்ற இடங்களில் பட்டால் பருக்கள் மற்ற இடங்களுக்கும் பரவ ஆரம்பிக்கும்.
- பூண்டினை அரைத்து பேஸ்ட் செய்து இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இதனால் பருக்கள் மட்டுமின்றி கரும்புள்ளிகளும் நீங்கும்.
- முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி ஊற வைத்து சிறிது நேரம் கழித்து கழுவினால் முகப்பருக்கள் குறைவதோடு கரும்புள்ளிகளும் நீங்கும்.
அதிலும் முட்டையின் வெள்ளைக் கருவையும் எலுமிச்சை பழ சாற்றினையும் சேர்த்து தடவினால் இன்னும் சிறந்த பலன் கிடைக்கும்.
- வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து சருமத்தில் ஊற வைத்து சுத்தமான தண்ணீரால் கழுவதன் மூலம் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளிடம் இருந்து சருமத்தை பாதுகாக்கலாம்.
-
கற்றாழை சாற்றினை இரவில் முகத்தில் தடவி ஊற வைத்து காலையில் சுத்தமான நீரால் கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்து வந்தால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் சரும தொற்றுக்கள் நீங்கும்.
- வெந்தயக் கீரையை நன்கு அரைத்து பேஸ்ட்செய்து கொள்ளவேண்டும். பின் அதனை முகத்தில் தடவி, சிறிதுநேரம் காயவைத்து, பிறகு கழுவவேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி விடும்.
- இலுப்பை இலையை மைபோல் அரைத்து இரவில் பூசி காலையில் கழுவி வர கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளபளப்பாகும்.
- ஜாதிக்காயை அரைத்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவி வர கரும்புள்ளிகள் மறையும்
- இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து, தடவி வந்தால், கரும்புள்ளிகள் சீக்கிரம்போய் விடும்.
- உருளை கிழங்கை வெட்டி கரும்புள்ளிகள் மீது தேய்த்து வர கரும்புள்ளிகள் மறையும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US