மற்ற நாடுகளைவிட சுவிட்சர்லாந்து அகதிகளுக்கு அதிகம் உதவுகிறது: ஆய்வு முடிவுகள் மீது விமர்சனம்...
சுவிட்சர்லாந்து மற்ற நாடுகளைவிட அகதிகளுக்கு அதிகம் உதவுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
ஆனால், அந்த ஆய்வு முடிவுகள் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நேற்று வெளியான ஆய்வு ஒன்றின் முடிவுகள், சுவிட்சர்லாந்து மற்ற நாடுகளைவிட அகதிகளுக்கு அதிகம் உதவுவதாக தெரிவித்துள்ளன.
புலம்பெயர்ந்தோருக்கான சுவிஸ் மாகாணச் செயலகம் மேற்கொண்ட அந்த ஆய்வு, சுவிட்சர்லாந்து ஆபத்தான நடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான அகதிகளை ஆண்டுதோறும் வரவேற்பதாகவும், மற்ற நாடுகளைவிட சிறந்தவகையில் அவர்களை குடியமர்த்த உதவுவதாகவும் தெரிவிக்கிறது.
அகதிகள் எந்த நாட்டிலிருந்து வந்தாலும், அவர்களுக்கு மனிதநேய விசாக்கள் வழங்குவதன் மூலம் மற்ற நாடுகளை விட சுவிட்சர்லாந்து அகதிகளுக்காக கூடுதலாக செய்வதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
ஆனால், கொள்கையளவில் அந்த ஆய்வை வரவேற்றுள்ள சுவிஸ் அகதிகள் கவுன்சில், மனிதநேய விசாக்கள் வழங்குதல் மற்றும் குடும்ப உறுப்பினர்களை இணைத்தல் ஆகிய விடயங்களில் சுவிட்சர்லாந்து அதிக கட்டுப்பாட்டுடன் நடப்பதால், அது எடுக்கும் நடவடிக்கைகள் செயல்திறன் மிக்கவையாக இல்லை என விமர்சித்துள்ளது.