ஒரே ஒரு ஒப்பந்தம்... மாதம் பல கோடிகள் வருவாய் ஈட்ட முகேஷ் அம்பானிக்கு உதவிய நபர்
இந்தியாவில் இருந்து ஏற்றுமதியில் 5 பில்லியன் டொலர்கள் இலக்கைத் தொட்ட முதல் பிராண்ட் ஆப்பிள் என்றே கூறப்படுகிறது.
முகேஷ் அம்பானினியுடன் ஒப்பந்தம்
2023 நிதியாண்டில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் இருந்து ரூ 40,000 கோடி அளவுக்கு ஏற்றுமதியை முன்னெடுத்துள்ளது. இந்தியாவில் இருந்து ஆப்பிள் தயாரிப்புகள் ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, இத்தாலி, ஜேர்மனி என பல நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த வெற்றிக்கு முதன்மை காரணமாக ஆஷிஷ் சவுத்ரி என்பவரையே குறிப்பிடுகின்றனர். இவரே ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய தலைமையாக உள்ளார்.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவன உற்பத்தி என்பது 2020ல் 1 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது 5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த ஆஷிஷ் சவுத்ரி என்பவரே மாதம் பல கோடிகள் வருவாய் ஈட்டும் வகையில் முகேஷ் அம்பானினியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.
2023ல் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் புதிய கடைகள் பல திறக்க முடிவு செய்தது. மும்பை மற்றும் டெல்லியில் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் மும்பை மாநகரில் திறக்கப்பட்ட ஆப்பிள் கடை என்பது Reliance Jio வணிவளாகத்தில் அமைந்துள்ளது.
டெல்லியை சேர்ந்த ஆஷிஷ் சவுத்ரி
முகேஷ் அம்பானியுடன் முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை Reliance Jio வணிவளாகத்தில் அமைந்துள்ள ஆப்பிள் கடையின் வாடகை என்பது 15 சதவிகிதம் அதிகரிக்கும்.
தற்போது மாதம் ரூ 42 லட்சம் வாடகையாக ஆப்பிள் நிறுவனம் முகேஷ் அம்பானிக்கு செலுத்தி வருகிறது. அத்துடன் முதல் 3 ஆண்டுகள் வருவாயில் 2 சதவிகிதம் முகேஷ் அம்பானிக்கு செலுத்தப்பட வேண்டும் என்றும் ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியை சேர்ந்த ஆஷிஷ் சவுத்ரி 2019ல் ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய செயல்பாட்டுத் தலைவராக சேர்ந்தார். அதன் பின்னர் 2023ல் இந்தியா, மத்திய கிழக்கு, மத்திய தரைக்கடல், கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் துணைத் தலைவராக பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |