அட்சய திருதி எப்போது? எந்த ராசிக்காரர்களுக்கு நகை அதிகம் சேர வாய்ப்பு உள்ளது?
2022-ம் ஆண்டு, அட்சய திருதியை மே 3-ம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
மே 3-ம் திகதி காலை 5.18 மணிக்குத் தொடங்கும் அட்சய திருதியை, மே 4-ம் திகதி காலை 7:32 மணி வரையில் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த வருடம் அட்சய திருதியை அன்று காலை 5:49 மணி முதல் மதியம் 12:13 முகூர்த்த நேரமாகக் குறித்துள்ளனர். இந்த நேரத்தில் மக்கள் தங்கம் வாங்கினால் நல்லது.
எந்த ராசிக்காரர்கள் எப்போது வாங்கலாம்
மேஷ ராசிக்காரர்கள் ஞாயிறு வெள்ளி நகை வாங்கலாம். ரிஷபம் ராசிக்காரர்கள் புதன் வெள்ளி நகை வாங்கலாம்.
மிதுனம் ராசிக்காரர்கள் திங்கள் வியாழன் நகை வாங்கலாம். கடகம் ராசிக்காரர்கள் ஞாயிறு,திங்கள், புதன் நகை வாங்கலாம்.
சிம்மம், மகரம் ராசிக்காரர்கள் புதன் வெள்ளியும் நகை வாங்கலாம்.
நகை அதிகம் சேரவுள்ள ராசிக்காரர் யார்?
- கன்னி ராசிக்காரர்கள் சனிக்கிழமையும்
- துலாம் ராசிக்காரர்கள் திங்கள் வெள்ளியும்
- விருச்சிகம் ராசிக்காரர்கள் சனிக்கிழமையும்
- தனுசு ராசிக்காரர்கள் வியாழக்கிழமையும்
- கும்பம் ராசிக்காரர்கள் புதன், வெள்ளி, ஞாயிறு கிழமையும்
- மீனம் ராசிக்காரர்கள் திங்கள், வியாழன் கிழமைகளில்
நகை வாங்க நல்ல நாட்கள். இந்த கிழமைகளில் சித்தயோகம், சுப முகூர்த்தம் ஆகிய வேளையில் தங்க நகைகள் வாங்க அதிகம் சேரும்.
சித்த யோகமும், சுவாதி நட்சத்திரமும் இணையும் நாளில், சொர்ண கணபதி படத்தை இல்லத்து பூஜையறையில் வைத்து வழிபட்டால் தங்கம், வெள்ளி தடையின்றி வந்து சேரும்.
கன்னி, விருச்சிகம் மற்றும் தனுசு ஆகிய ராசிக்காரர்களுக்கு சனி, வியாழன் ஆகிய இரு நாட்கள் மட்டும் தான் நகை வாங்குவதற்கு நல்ல நாட்களாக கருதப்படுகிறது. மற்ற நாட்களில் அவர்கள் நகை வாங்கினால், அந்த நகை அவர்களிடத்தில் இருக்காதாம்.