LPL 2026: ஏஞ்சலோ மேத்யூஸ் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய இருவர்
கண்டி ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தம்புள்ளை சிக்ஸர்ஸ் 205 ஓட்டங்கள் குவித்தது.
ரீஸா ஹென்ரிக்ஸ்
லங்கா பிரீமியர் லீக் 2026-யின் இரண்டாவது போட்டியில் கண்டி ஃபால்கன்ஸ் மற்றும் தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
முதலில் துடுப்பாட்டத்தைத் தொடங்கிய தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணியில் சண்டிமல் 8 ஓட்டங்களும், திக்வெல்ல 7 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர்.
ஃபர்ஹான் 23 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆக, ரீஸா ஹென்ரிக்ஸ் (Reeza Hendricks) அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார்.
குல்பதின் நைப்
எனினும் பவன் (7), அக்கர்மன் (16), லக்ஷன் (6) ஆகியோர் சொதப்ப, குல்பதின் நைப் (Gulbadin Naib) சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
ஹென்ரிக்ஸ், நைப் இருவரின் அதிரடி ஆட்டத்தில் தம்புள்ளை சிக்ஸர்ஸ் 205 ஓட்டங்கள் குவித்தது.
இறுதிவரை களத்தில் நின்ற ஹென்ரிக்ஸ் 87 (50) ஓட்டங்களும், நைப் 46 (23) ஓட்டங்களும் விளாசினர். துஷாரா மற்றும் ஹேமந்தா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |